உலகம்

3 மாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

(UTV | இந்தியா) – இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்து பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சுமார் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதுடன், தொடர்ந்தும் மீட்பு பணி நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

வளர்ப்பு பிராணிகளுக்கும் கொவிட்19 பரிசோதனை

உலகின் முதற்தடவையாக ட்ரோனைப் பயன்படுத்தி ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் துபாய்

editor

உலகளவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது