சூடான செய்திகள் 1

3 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன போக்குவரத்து

(UTV|COLOMBO) கருவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிடி காவற்துறை நிலையங்களுக்கு உட்பட பிரதேசத்தின் சில வீதிகளில், இன்று (01)  தொடக்கம் 3 மாதங்களுக்கு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய காலி வீதி கிலேன் ஆபர் பிரதேசம் கடல் வீதி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மழை நீர் செல்வதற்கான சுரங்கப்பாதை ஒன்றை அமைப்பதற்காக இவ்வாறான தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹெகே வீதி ஊடாக காலி நோக்கி பயணிக்க முடியும் என குறிப்பிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

ஞானசார தேரருக்கு சுதந்திர தினமன்று பொது மனிப்பு வழங்குமாறு கோரிக்கை

ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்