உள்நாடு

3 இடங்கள் முன்னேறிய இலங்கை கடவுச்சீட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான Nomad Capitalist சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை கடவுச்சீட்டுக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு தற்போது தரவரிசையில் 43.5 மொத்த மதிப்பெண்களுடன் 168ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த அமைப்பு 199 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை 171ஆவது இடத்திலிருந்து 3 இடங்கள் முன்னேறி 168ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கடவுச்சீட்டுகளின் வலிமையை அறிவிக்க Nomad Capitalist 5 விடயங்களை கருத்திற் கொள்கிறது.

தற்போதைய இலங்கை கடவுச்சீட்டு 57 நாடுகளுக்கு பயணிக்க அனுமதிப்பதே, இந்த முன்னேற்றத்திற்கான காரணமாகும்.

Nomad Capitalist அறிக்கையின்படி, இந்த ஆண்டு உலகிலேயே மிகவும் வரவேற்கத்தக்க கடவுச்சீட்டை கொண்ட நாடு அயர்லாந்து ஆகும்.

தற்போதைய அயர்லாந்து கடவுச்சீட்டின் ஊடாக விசா இன்றி அல்லது on arrival visa உடன் 176 நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கிறது.

சுவிட்சர்லாந்து மற்றும் கிரீஸ் ஆகியவை இரண்டாவது இடத்தில் உள்ளன.

இந்த இரண்டு நாடுகளின் மக்களும் உலகெங்கிலும் உள்ள 175 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது on arrival visa உடன் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி இந்தியா 148ஆவது இடத்தில் உள்ளது, மேலும் இந்தியர்கள் விசா இல்லாமல் அல்லது வருகை விசாவில் 75 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

இருப்பினும், பூட்டான் இலங்கை மற்றும் இந்தியாவை பின்தள்ளி 140ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது மாலைத்தீவுக்குப் பிறகு தெற்காசியாவில் இரண்டாவது மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு

editor

சுனாமிக்கு 15 வருடங்கள் – 2 நிமிட மௌன அஞ்சலி இன்று

மீண்டும் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்