கேளிக்கை

3வது முறை இணையும் சிம்ரன், திரிஷா

(UTV|INDIA) 1999ல் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம், ஜோடி. பிரவீன் காந்த் இயக்கிய இதில், திரிஷா சிறு வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் ஹீரோயின் சிம்ரனின் தோழி வேடத்தில் ஓரிரு காட்சியில் மட்டும் தோன்றினார். சமீபத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்திருந்த சிம்ரன், திரிஷா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கதை கொண்ட இதை சனந்த் இயக்குகிறார். டைட்டில் முடிவாகவில்லை.

 

 

 

 

Related posts

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

அரசியலில் நானும் ரஜினியும் எதிரும், புதிரும்தான்-கமல்

நடிகை தமன்னாவுக்கு கொரோனா