உலகம்

3ஆவது முறையாக செயலிழந்தது TWITTER

(UTV | வாஷிங்டன் ) –  டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிக் கொண்டதையடுத்து
குறித்த நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.

அதன் முதல் அங்கமாக ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து டுவிட்டர் செயல்பாடு திடீரென முடங்கியது. இதற்கு எலான் மஸ்க் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை டுவிட்டரின் தகவல் பரிமாற்றம் தடைபட்டது.

தற்போது 3-வது முறையாக நேற்று மீண்டும் டுவிட்டர் செயல்பாடு முடங்கியது.

இதற்கமைய அமெரிக்காவில் கடந்த 28 ஆம் திகதி இரவு முதல் நேற்று காலை வரை இந்த நிலை ஏற்பட்டது.  பல பயன்பாட்டாளர்களின் கணக்குகள் செயலிழந்தது.

இது தொடர்பாக டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் புகார் அளித்தனர். இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர். அதே நேரம் சிலர் டுவிட்டரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

INDIA ELECTION 2024 : வெல்லப்போவது யார்? இந்தியா கட்சிகள் பெற்ற இடங்களின் விபரம்

ஜனாதிபதிக் குடும்பத்திற்கு கொரோனா

இனவெறிக்கு நமது மௌனம் உடந்தையாக இருக்கிறது