விளையாட்டு

இலங்கை கிரிக்கட்டின் தேர்வுக்குழுவில் மாற்றம்!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட்டின் தேர்வுக் குழுவில் மாற்றமொன்றை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய கிரிக்கட் தேர்வுக்குழுவின் நீடிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவடையவுள்ளது.

2016ம் ஆண்டு மே மாதம் 01ம் திகதி தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு செயற்படும ்வகையில் தற்போதைய தேர்வுக்குழு நியமிக்கப்பட்ட நிலையில் , பின்னர் அது வெற்றியாளர் கிண்ணத் தொடர் காரணமாக இம் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டது.

இது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புதிய தேர்வுக் குழுவொன்றை நியமிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் , இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வௌிநாட்டு ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

மும்பை இந்தியன்ஸ்வுடன் போராடி வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப்!!

தேசிய காற்பந்தாட்ட குழாமிற்கான பயிற்சிகள்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண சர்வதேச கிரிக்கெட் போட்டி