வகைப்படுத்தப்படாத

விளையாட்டு மைதானம் வெட்ட இடம் கொடுக்க மறுத்த பொகவந்தலா ஆல்டி தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – மைதானத்திற்கு இட ஒதுக்கிடு செய்துதறுமாறு கோறி ஆல்டி தோட்டம் ஆர்பாட்டம்.

பொகவந்தலாவ ஆல்டி கிழ் பிரிவு தோட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இடஒதுக்கிடு செய்து தருமாறு கோறி ஆல்டி கிழ்பிரிவு தோட்டமக்கள் 16.06.2017வெள்ளிகிழமை காலை 07.30 மணி முதல் 10வரை ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தனர்.

தொழிலாளர் தேசிசங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் ஆல்டி கிழ்பிரிவு தோட்டத்திற்கு விளையாட்டு மiதானம் ஒன்று அமைப்பதற்கு ஜந்த இலட்ச்சம் ருபா நிதி ஒதுக்கபட்டுளள் போதிலும் தோட்டம் மைதானம் அமைப்பதற்கு இட ஒதுக்கிடு வழங்க மறுப்பு தெறிவித்து வருவதாக ஆர்பாட்டத்தில் ஈடபட்ட தொழிலாளர்கள் தெறிவித்தனர்.

குறித்த தோட்டதோட்டத்தில் கரபந்தாட்ட விளையாட்டு மைதானம் இருந்த இடத்தில் முன்பள்ளி பாடசாலை ஒன்று அமைக்பட்டுள்ள போதிலும் அதற்கு பதிலாக தோட்டநிர்வாகம் வேறு ஒரு இடத்தினை ஒதுக்கி தருவதாக வாக்குருதி வழங்கியுள்ளபோதிலும் தற்போது மைதானம் அமைப்பதற்கான வழங்க தோட்டநிர்வாகம் மறுத்து வருவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் தெறிவித்தனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது சுமார் 100கும் மேற்மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

இதே வேலை கடந்நத ழூன்று தினங்களுக்கு முன்பு மைதானம் வெட்டுவதற்கான பெக்கோ இயந்திரம் வரவழைக்கபட்டும் அந்த இயந்திரம் திருப்பி அனுப்பபட்டதாகவும் தெறிவிக்கபடுகிறது.

நோட்டன்பீரிஜ் நிருபர் இராமசந்திரன்

Related posts

Army Commander before PSC

Special Traffic Division for Western Province – South soon

வட கொரிய தலைவரின் தங்கை தென்கொரியா பயணம்