(UDHAYAM, COLOMBO) – தமது விமானப்படை தாக்குதலில் சிரியாவில் வைத்து ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பகார் ஹல் பக்டாடி உயிரிழந்துள்ளாரா? இல்லையா? என்பது தொடர்பில் ரஷ்யா பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 28ம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் உயிரிழந்திருக்கக்கூடும் என ரஷ்யா தெரிவித்திருந்தது.
ரஷ்யா ஆரம்பித்துள்ள விசாரணைக்கு அமைய வட சிரியாவில் ஐ.எஸ் அதிகார பகுதியொன்றில் வைத்து அதன் உறுப்பினர்களை சந்திக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை , ஐ.எஸ் அமைப்பின் தலைவர் பலியானார் என இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.