விளையாட்டு

நேற்றைய வெற்றியுடன் விராட் கோலி படைத்துள்ள பிரமாண்ட சாதனை

(UDHAYAM, COLOMBO) – ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்து, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னைய டிவில்லியர்ஸின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார்.

செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஸ் அணியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். இந்த போட்டியில் 96 ஓட்டங்களை எடுத்த விராட் கோலி 8 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் அவர் 88 ஓட்டங்களை பெற்ற போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

தனது 175 ஆவது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்த விராட் கோலி இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதற்கு முன்பு தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ பி டிவில்லியர்ஸ் 182 இன்னிங்சில் இந்த இலக்கை தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோலி முறியடித்து இருக்கிறார்.

இந்திய தரப்பில் சவுரவ் கங்குலி 200 இன்னிங்சிலும், சச்சின் தெண்டுல்கர் 210 இன்னிங்சிலும், தோனி 241 இன்னிங்சிலும் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 வயதான விராட் கோலி இதுவரை 27 சதங்கள், 42 அரைசதங்கள் உட்பட 8,008 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

Related posts

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி பெடரர் சாதனை!!

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?