வகைப்படுத்தப்படாத

கொட்டாவையில் தண்டவாளத்தில் தலை வைத்த மாணவி கடத்தப்பட்டாரா?

(UDHAYAM, COLOMBO) – தனது மகளை இனந்தெரியாத எவரோ கடத்திச் சென்று இந்த கொடூரத்தை செய்துள்ளதாக தாம் எண்ணுவதாக கொட்டாவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் தலை வைத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படும் மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

காவற்துறை மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எந்த பிரச்சினையும் எனது மகளுக்கு இல்லை.

மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.

எனது மகளை இனந்தெரியாத எவரோ கடத்திச் சென்று இந்த குற்றச் செயலை செய்திருக்கலாம் என எண்ணுகிறேன்.

மகள் இறப்பதற்கு முன்னர் கையடக்க தொலைபேசி ஊடாக  எனது மனைவிக்கும் இளைய மகனிடமும் தான் தற்போது வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார்” என தந்தை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த மாணவி தண்டவாளத்தில் தலை வைத்து இருந்ததாக களனிவெளி புகையிரத சாரதி, காவற்துறையிடம் கூறியுள்ளார்.

கொழும்பின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் உயர்தரத்தின் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய கவிந்தி பபசரா ஜயசேகர என்ற இந்த மாணவி நேற்று முன்தினம் இரவு 8.05 மணியளவில் இவ்வாறு புகையிரத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடையில் தனியார் வகுப்பு ஒன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உடல் வேறாகவும் தலை வேறாகவும் தண்டவாளத்திற்கு அருகில் இருந்து காவற்துறையால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மாணவியின் உடலம் தற்போதைய நிலையில் ஹோமாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொட்டாவை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

මරණ දඬුවමට එරෙහි පෙත්සම් යළි සළකා බැලීම අද

யாழில் மர்ம கும்பலால் நபரொருவர் மீது கொடூரத் தாக்குதல்

සමන් දිසානායක CID අත්අඩංගුවට.