வகைப்படுத்தப்படாத

கேகாலையில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

(UDHAYAM, COLOMBO) – கேகாலை – அம்பன்பிட்டிய தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை அவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

உடலம் தந்போதைய நிலையில் கேகாலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

 

Related posts

Court rejects NPC Secretary’s anticipatory bail application

தமிழகத்தின் அடுத்த முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி

தேயிலை தோட்டத்தில் பிடிப்பட்டுள்ள இராட்சதன்!!