வகைப்படுத்தப்படாத

விஷ இரசாயன காகிதத்தாளை கொண்ட பாடப்புத்தகங்கள் – அரசாங்கம் முற்றாக மறுப்பு

(UDHAYAM, COLOMBO) – அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில புத்தகங்கள் விஷ இரசாயனத்தினாலான காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக வைத்தியர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள கூற்றை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டார்.

இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள காகிதங்கள் ITI என்ற தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் சிபார்சுக்கு பின்னரே காகிதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர் அந்த பரிசோதனைக்கான ஆவணத்தையும் செய்தியாளர்களுக்கு அங்கு சுட்டிகாட்டினார்.

வைத்திய சங்கம் சுகாதாரம் தொடர்பிலோ தமது உரிமைகள் தொடர்பிலோ கவனம் செலுத்தவில்லை அரசாங்கத்தை சிரமங்களுக்குள்ளாக்குவதிலேயே கவனம் செலுத்திவருகின்றன. இவ்வாறான உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவித்து பெற்றோரை சிரத்திற்குள்ளாக்க பார்க்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Strong winds to reduce over next few days

Kompany loses first game as Anderlecht boss

கண்டி பொது மருத்துவமனையில் நபரொருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!