வகைப்படுத்தப்படாத

சமூகங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் தேவை

(UDHAYAM, COLOMBO) – பிரச்சினைகளுக்கு பேச்சவார்த்தையின் மூலமே தீர்வு காணவேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையே ஐக்கித்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் தேவையாகும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டதுடன் பிரச்சினைகளை சட்டவாதத்தின் மூலம் தீர்க்க முடியாது. பிரச்சினைகளை பேசிக்கொண்டிருக்காது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ளவேண்டு;ம் என்று குறிப்பிட்டார்.

மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையிலே முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை தெரிவிப்போர் மற்றும் வன்முறையை தூண்டுவோர் தொடர்பில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சட்டமா அதிபர் மூலம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்களான தயசிறி ஜெயசேகர , டாக்டர் ராஜித சேனாரத்ன ஆகியோர் தெரிவித்தனர்.

Related posts

ஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்

காத்மண்டு விமான விபத்தில் 50 பேர் பலி