சூடான செய்திகள் 1

29 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – துபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 29,000 க்கும் அதிகமான சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 16 இலட்சத்திற்கும் அதிகம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேகாலை-வரகாபொல பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் – பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

சைபர் தாக்குதல் உள்ளான இலங்கை இணையத்தளங்கள் வழமைக்கு