வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சந்தித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் கடற்படை தளபதி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம்;வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காலநிலையில் மாற்றம்

கரப்பான் பூச்சியால் பிரசாரத்தில் சிரிப்பலை…

විදුලිබල මණ්ඩල තෙල් සංස්ථා ගැටළුව සමතයකට