விளையாட்டு

இரு முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்ட இலங்கை வீரர்களால் மாறிய போட்டி:கலங்கிய மாலிங்க

(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணியைத் தீர்மானிக்கும், போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஹசன் அலி மற்றும் ஜூனைட் கான் ஆகியோர் மும்மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அதன் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

எனினும் பாகிஸ்தான் அணியின் பிரபல வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில் சர்ப்ராஸ் அஹமட் அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றார்.

எனினும் லசித் மாலிங்க பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தார்.

இந்நிலையில் லசித் மாலிங்கவின் பந்து வீச்சின் போது இரு முக்கிய பிடியெடுப்புக்களை இலங்கை அணியின் வீரர்கள் தவறவிட்டனர்.

இதன் காரணமாகவே நேற்று பாகிஸ்தான் அணி வெற்றி பெற காரணமாக அமைந்ததாக கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளன.

மாலிங்வின் பந்து வீச்சில் சர்ப்ராஸ் அஹமட் துடுப்பாடிய போது வந்த இரு பிடியெடுப்புக்களை திஸர பெரேரா மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தறவிட்டிருந்தனர்.

இதன்போது லசித் மாலிங்க கலங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கிரிக்கட்டின் புதிய தேர்வுக்குழு நியமனம்…

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா