வகைப்படுத்தப்படாத

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

(UDHAYAM, COLOMBO) – 200 வருட இந்திய வம்சாவளி மலையக தமிழர் வரலாற்றில் ஹட்டன்

ஹைலன்ஸ கல்லூரியின் 125 வது ஆண்டு விழா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துகொள்ளவுள்ளதாக கல்லூரியின் அதிபர் எஸ். சிரிதரன் தெரிவித்தார்

ஹைலன்ஸ்   கல்லூரியின்  125 வது ஆண்டு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தர்

11.06.2017 மாலை ஹைலன்ஸ் கல்லூரியில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கல்லூரியின் முன்னால் அதிபர் எஸ்.விஜேசிங்.கல்லூரியின் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் கே.சித்திரவேல் (சீடா கல்வி அபிவிருத்தி நிலைய இனைப்பாளர்)  கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் ஜே.லெனின்மதிவானம் (பிரதி ஆணையாளர் ,கல்வி அமைச்சு) ஆகியோர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  எதிர்வரும் 29.06.2017 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஹட்டன் டீ.கே.டபில்யூ கலாசாரமண்டபத்தில்   ஹைலன்ஸ்  கல்லூரியின் 125 வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது

கல்லூரியின் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான கல்விமான்களை  உறுவாக்கியை பெருமை ஹைலன்ஸ் கல்லூரிக்கு உண்டு அவ்வாறே பல்வேறு வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும்  பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள். ஆசிரியர்கள்.பாடசாலையின் அபிவிருத்தி சங்கம்.பழைய மாணவர் ஒன்றியம் .நலன்விரும்பிகளின் ஒத்துழைப்போடு  பல சாதனைகளை படைத்த ஹைலன்ஸ் கல்லூரி   125 வது விழாவை சந்திக்கிறது

விழா நிகழ்கவின் போது

125 வது ஆண்டு  நினைவு முத்திரை வெளியிட்டுவைக்கவுள்ளதுடன் பாடசாலைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இடம்பெறவுள்ளது

மேலும்  த ஐலண்டர் எனும்  மலர் வெளியீடும் சகல துறைகளிலும் சாதனைகளை படைத்த கல்லூரியின் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்

நிகழ்வில் அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் கல்வித்திணைக்கள அதிகாரிகள் பழையமாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

 

Related posts

சர்ச்சைக்குரிய பகுதியில் சீன விமானப்படை போர் பயிற்சி

spill gates of Upper Kotmale Reservoir opened

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்