(UDHAYAM, COLOMBO) – வருடத்திற்கு 8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் சர்வதேச கடலில் சேர்வதாக உலகப் பொருளாதார மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களால் கடல் மீன் வகைகளில் எண்ணிக்கை குறைவடையும் நிலையில் , கடல் நீர் வெப்பமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமுத்திரத்தை நிலையான முறையில் பயன்படுத்துவது தொடர்பில் முதல் ஐக்கிய நாடுகளின் மாநாடு தற்போது இடம்பெற்று வரும் நிலையில் , இதன் போது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் , 2050ம் ஆண்டளவில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் நிரப்பப்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
[ot-video][/ot-video]