வகைப்படுத்தப்படாத

வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெரும் நோயாளர்களுக்கு உணவு வழங்கிவதை நிறுத்தியதால் நோயாளர்கள் பெரும் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – வட்டவளை மாவட்ட வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு வழங்கப்படுவதில்லையென  வைத்தியசாலையிலுள்ள நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்

கடந்த இரு வாரங்களாக    இவ்வாறு உணவு வழங்குவதில்லையென்றும் சில சந்தர்பங்களில் பட்டினியுடன் இப்பதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்

தூரப்பகுதிகளிலிருந்து வருகைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் தங்கியிருக்கும்  நோயார்களை பார்வையிட உறவினர்கள் மூன்று நேரம் வருகைத்தமுடியாத சந்தர்பங்களில் வீட்டு உணவும் இல்லாத நிலையில் பட்டினி கிடப்பதாக தெரிவிக்கின்றனர்

இது தொடர்பில் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி சனத்பெரேராவிடம்  கோட்ட போது கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் நங்கியிருந்து சிகிச்சை பெரும் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தகாரினால் திடீரென உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளதால் நோயாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டி பணத்தொகை குறைக்கப்பட்டு வழங்கியுள்ளதாலே உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்

சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட வைத்திய காரியாலயத்திற்கு அறிவித்துள்ளாகவும் உடனடியாக தீர்வினை பெற்றுத்தருவதாகவும் அறிவித்துள்ளாக தெரிவித்தார்

வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த வெளிஓயா.லொனக்.மீனாட்டி.கரலீனா. ரொசல்ல உட்பட பல பகுதிகளில் இருந்து வட்டவளை வைத்தியசாலைக்கு வருகைத்தரும் நோயாளர்கள் உணவு வழங்கப்படாமையினால்  பாதிப்புக்குளாகியுள்ளது

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

இராணுவ வீரர் அபிநந்தன் இந்தியாவை வந்தடைந்தார்

அனர்த்த நிலைமை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இடைவேளையின்றி இன்று இரவு வரை

Special Traffic Division for Western Province – South soon