விளையாட்டு

பங்களாதேஷ் அணியின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம்…புதிய உலக சாதனை படைப்பு! (படங்கள் இணைப்பு)

(UDHAYAM, COLOMBO) – ஐ.சி.சி. ​வெற்றியாளர் கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற 9 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெறறி பெற்றது.

கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் 8 விக்கட்டுக்களை இழந்து 265 ஓட்டங்களை நியூஸிலாந்து அணி பெற்றது.

இதையடுத்து, 266 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 47.2 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

இந்த போட்டியில் சகிப் அல் ஹசன் மற்றும் மொஹமதுல்லா இணைந்து ஐந்தாவது விக்கட்டுக்காக 224 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று உலக சாதனை படைத்திருந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

சகிப் அல் ஹசன் 114 ஓட்டங்களையும் , மொஹமதுல்லா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, செம்பியன்ஸ் ட்ரொபி தொடரின் 10 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211-21.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211-22-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_16.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_7.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_8.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_9.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_10.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_11.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_12.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_13.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_14.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163211_15.jpg”]

 

Related posts

இந்தோனேசியாவில் உயர்தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கைக்கு எதிராக தென்னாபிரிக்கா வெற்றி