(UDHAYAM, COLOMBO) – சர்வதேச சந்தையில் உள்ளுர் இயற்கை இறப்பரின் விலைகள் அதிகரித்துள்ளன என்று இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், தற்சமயம் உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ ஷீட் இறப்பர் 310 ரூபாவிலிருந்து 320 ரூபா வரை விற்பனையாகிறது. இந்த விலை ஒப்பீட்டளவில் உயர்ந்த விலையாக கருதப்படுகிறது.
இதனால், உள்ளுர் இறப்பர் செய்கையாளர்கள் இலாப நோக்குடன் தமது செயல்பாடுகளை முன்னெடுக்க முடியும். உள்ளுர் இறப்பரின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இறப்பர் செய்கை தொடர்பில் இளைஞர்களுக்கு விளக்கமூட்டும் விசேட பயிற்சி நெறி ஒன்றையும் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.