வணிகம்

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம்

(UDHAYAM, COLOMBO) – வெளிநாட்டவர்கள், இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெளிநாட்டவர்கள் வெளிநாட்டு நாணயங்களின் மூலம் 500,000 டொலர்களை வைப்பு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைப்பு கணக்குக்கு சிறப்பு வைப்பு கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது

இது வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது

அமரிக்க டொலர், பௌன்ட்ஸ்,சுவிஸ் பிராங், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், ஜப்பானிய யென், கனேடிய டொலர் போன்ற நாணயங்களில் இந்தக்கணக்குகளை திறக்கமுடியும்.

ஏனைய நாணயங்களில் கணக்குகளை திறப்பதற்கு அதிகாரிகள் ஒப்புதலை வழங்கவேண்டும்.

இதேவேளை இரட்டை பிரஜாவுரிமைகளை கொண்டுள்ள வெளிநாட்டவர்களின் மனைவிமாருக்கு இலங்கையில் தங்குமிட வீசாவை பெற்றுக்கொள்ளமுடியும்.

இதனைதவிர குறித்த வெளிநாட்டவர்களின் பிள்ளைகள் கணக்கில் 300,000 டொலர்கள் வைப்பு செய்யப்பட்டால்,அவர்களும் இலங்கையில் குறித்த கணக்கின் கால அளவின் அடிப்படையில் இலங்கையில் தங்கியிருக்கமுடியும் என்று அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கிடையில் குறித்த கணக்குகளுக்கு நாணய மாற்று கட்டுப்பாட்டு சட்டம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

விவசாயிகளுக்கு விதைப் பயறுகள்

Viberஆல் privacy boost அறிமுகம்

நிதி அமைச்சரின் அறிவிப்பு