வகைப்படுத்தப்படாத

அபிவிருத்தி மதிபீட்டு மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் கபீர். திலகர் எம்.பி பூட்டான் பயணம்

(UDHAYAM, COLOMBO) – அபிவிருத்தி மதிப்பீடுகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக அரச பொது முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாஸிம் , நுவரரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோர் பூட்டான் பயணமாகியுள்ளனர்.

2030ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்குகளாக ஐக்கிய நாடுகள் சபையினால்  நிர்ணயிக்கப்பட்டுள்ள ‘நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை’ அடையும் வகையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் பொறிமுறைகள் தொடர்பாக பல்வேறு செயலமர்வுகள், மாநாடுகள் நடைபெறுகின்றன.

அபிவிருத்தி மதிப்பீட்டுப் பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளும் எண்ணக்கருவினை முன்வைத்தார் என்ற வகையில் அமைச்சர் கபீர் ஹாசிம் கடந்த மாதம் கிரிகிஸ்தான் நாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தற்போது சர்வதேச ரீதியாக மதிப்பீட்டப் பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று  சேர்க்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் அபிவிருத்தி மதிப்பீட்டு பணிகளில் ஆர்வம் காட்டும் உறுப்பினர்களுக்கான விஷேட செயலமர்வு கொழும்பில் நடைபெறவுள்ளது.

தென்னாசிய பிராந்தியத்தில் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் மதிப்பீடுகளிலும் முன்னணியில் திகழும் பூட்டான், தென்னாசிய மதிப்பீட்டு சமூகத்துடன் (CoE) இணைந்து நான்கு நாள் (6-9 June) மாநாடு ஒன்றினை தலைநகரமான திம்புவில் எற்பாடு செய்துள்ளது.

குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அமைச்சர் கபீர் ஹாஸிம் , நுவரரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ்  பூட்டான் பயணமாகியுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

 

Related posts

பஸ் மீது பெற்றோல் குண்டு வீச்சு

Muslim Parliamentarians to accept Ministerial portfolios again

விஜயதாச ராஜபக்‌ஷ விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்