(UDHAYAM, COLOMBO) – வடக்கு பிரதேசத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி இராஜாங்க அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் நாட்டின் பாரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்
ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதியுதவியினை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக மொறட்டுவ பல்கலைக்கழகம் மேற்கொண்ட சாத்தியவள அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
பேசாலையிலும் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.
20 மீன்பிடி இறங்குதுறைகளும் வள்ளங்களுக்கான 7 நங்கூரங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதேபோன்று குளிருட்டி மற்றும் மீன்விநியோக மத்திய நிலையம் ஆகியனவும் ஏற்படுத்தப்படவுள்ளன. நீர் உயிர்வாழ் தொழிற்பேட்டையொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்மூலம் 10ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.