(UDHAYAM, COLOMBO) – 017ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11வது வடமாகாண விளையாட்டு போட்டி அண்மையில் இடம்பெற்றது. இதில் நடைபெற்ற 43 விளையாட்டுகளில் தைகொண்டோ (பெண்கள்), யூடோ (பெண்கள்), கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(ஆண்கள்), துடுப்பாட்டம்(ஆண்கள்)
போன்ற விளையாட்டுகளில் முதலாம் இடங்களையும், 10 விளையாட்டுகளில் இடண்டாம்
இடங்களையும், 9 விளையாட்டுகளில் மூன்றாம் இடங்களையும் கிளிநொச்சி மாவட்டம் பெற்றுக்கொண்டது. இப்போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி
போட்டியிட்ட வீர வீரங்கனைகளுக்கு கிளிநொச்சி மாவட்டம் சார்பாக அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும் அடுத்த 2018ம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டு போட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துவதற்கான ஆரம்பநிகழ்வாக மாகாண விளையாட்டு கொடி மாகாண
விளையாட்டு பணிப்பாளர் திரு இ.குருபரன் அவர்களால் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு எம்.ஆர் மோகனதாஸ் அவர்களிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.