விளையாட்டு

இந்திய அணியை வெற்றிகொள்வதற்கு குமார் சங்ககாரவின் யோசனை

(UDHAYAM, COLOMBO) – சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இந்திய அணியுடன் நடைபெறும் போட்டியில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கலந்துகொள்வதன் முக்கியத்துவத்தை முன்னாள் இலங்கை அணித்தலைவர் சங்கார வலியுறுத்தியுள்ளார்.

அஞ்சலோ மத்தியூஸ் விளையாடத்தவறும் பட்சத்தில் இலங்கை அணிக்கு இந்த போட்டியில் பெரும் பாதிப்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டியில் திசரபெரேராவின் பங்களிப்பு குறித்தும் அவர் கூறினார்.

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கட் அணிகளுக்கிடையிலான இந்த போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிலையிலேயே சங்ககாரா சர்வதேச கிரிக்கட் பேரவையின் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி இந்த போட்டியில் கூடுதலான நம்பிக்கையுடன் களத்தில் இறங்கும் என்று கூறியுள்ள சங்ககார தென்ஆபிரிக்க அணியுடன் சமீபத்தில் நடைபெற்ற போட்டியின் போது 50 ஓவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசாமையின் காரணமாக உபுல் தரங்கவிற்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஏற்பாடுகளுடன் ஊக்கத்துடன் விளையாடினால் இந்திய அணியை வெற்றிகொள்ளமுடியும் என்றும் அவர் கூறினார்.

குமார் சங்ககார இந்த போட்டித்தொடரில் விமர்சகராக செயல்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பங்களாதேஷை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஒலிம்பிக்கில் சீனா தலையிடக் கூடாது