(UDHAYAM, COLOMBO) – சுமார் 15 அடி நீளமான இராட்ச முதலையொன்றை அக்குரஸ்ஸ – திப்பொட்டுவாவ பிரதேசவாசிகள் பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த பிரதேசத்தில் தேயிலை தோட்டமொன்றில் இருந்து இந்த இராட்சத முதலை மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் காலில் இந்த விலங்கு மிதிப்பட்டுள்ள நிலையில், பின்னர் இது தொடர்பில் அவர் பிரதேசவாசிகளுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வன விலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து 2 மணித்தியாலங்களுக்கு மேல் போராடியே இந்த முதலையை பிடித்ததுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிடிக்கப்பட்ட இந்த முதலையை விடுவிப்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த விலங்கு இவ்வாறு தரைக்கு வந்திருக்கலாம் என நம்பபடுகிறது.