சூடான செய்திகள் 1

27 மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு

(UTVNEWS|COLOMBO) – இந்த வருட இறுதிக்குள் 27 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் மருந்து வகைகளை இறக்குமதி செய்வோர் சங்கத்தின் 18 ஆவது மாநாடு அம்பாந்தோட்டையில் நடைபெற்றது.

இதன்படி, 5 ஆயிரம் மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தரமான உயர் மருந்து வகைகளை பொது மக்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம் எனவும் இவ் வருடத்தில் எதிர்வரும் காலங்களில் மேலும் 27 மருந்து வகைகளின் விலையை குறைத்து அதன் நன்மைகளை பொது மக்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளோம் எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிற்போடப்படாது

அமைச்சு பதவியில் தொடர்வதா? இல்லையா? தீர்மானம் இன்று