உலகம்

27 இந்திய மீனவர்களை விடுதலை செய்யகே கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

(UTV | கொழும்பு) –

இராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மூன்று விசைப் படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைதுசெய்தது.

அதேபோல தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது இரண்டு விசைப் படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் கைதுசெய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது. இந்த நிலையில் ஐந்து விசை படகையும், 27 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், அதேபோன்று இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம், ஜெகதாப் பட்டினத்தை சேர்ந்த 9 படகுகளை மத்திய அரசு மீட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 18ஆம் தேதி பாம்பன் சாலை பாலத்தின் நடுவில் மீனவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள் – தடை செய்யப்பட்ட மருந்துகள்!

ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் வரையில் நீடிப்பு