(UDHAYAM, COLOMBO) – சத்தோச கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்கப்படும் பாஸ்மதி அரிசி நுகர்வுக்கு உகந்தது என கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசி பிளாஸ்டிக் மூலப் பொருளினால் ஆனது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சு, குறித்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மக்கள் பாவனைக்கான பாதுகாப்பான அரிசி என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சத்தோச கூட்டுறவு நிறுவனத்தின் மீதான நற்பெயருக்க கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூகவலைத்தளங்களின் ஊடாக பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
எவ்வாறாயினும் பாகிஸ்தானில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.