(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக இருந்தாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
களுத்துறை கல்வி வலயத்தின் பணிப்பாளர் பிரியானி முதலிகே இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
வெள்ளம் காரணதமாக மாணவர்களின் வீடுகள் மற்றும் உடமைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவளை, சப்ரகமுவ மாகாணத்திலும் மாணவர்களின் வருகை குறைவாக உள்ளதாக மாகாண பணிப்பாளர் சேபால குருப்பு தெரிவித்தார்.
பாடசாலைகளில் சுத்திகரிப்பு பணிகள் இன்னும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாணவர்களின் வருகை குறைவு காரணாக இங்கிரிய பகுதிகளில் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.