வகைப்படுத்தப்படாத

சவுதி உட்பட 4 நாடுகள் , கட்டாருடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தன

(UDHAYAM, COLOMBO) – சவுதி அரேபியா, எகிப்து , ஐக்கிய இராச்சியம் மற்றும் பாரெய்ன் ஆகிய நாடுகள் , கட்டார் நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன.

கட்டார் தீவிரவாதத்துக்கு துணை போவதாக கூறியே இம்முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரானுடன், கட்டார் நெருங்கிய தொடர்ப்பைப் பேணுவதாக அந்நாடுகள் அறிவித்துள்ளன.

கட்டாருடனான போக்குவரத்தையும் துண்டிப்பதாகவும் இனிமேல் , கட்டார் நாட்டவர்கள் மேற்படி நாடுகளில் இருந்து வெளியேறவும் இரண்டு கிழமை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பானது மத்தியகிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சில வருடங்களுக்கு முன்னர் கட்டாருடனான இராஜதந்திர தொடர்புகளை மேற்படி நாடுகள் முறித்திருந்தன. தமது உயர்ஸ்தானிகர்களை மேற்படி நாடுகள் திரும்ப அழைத்திருந்தன.

எனினும் அதன்போது போக்குவரத்து துண்டிக்கப்படவில்லை. மேலும் கட்டார் நாட்டவர்களும் வெளியேறும்படி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இத்திடீர் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஹட்டன் நகரின் புத்தர் போதியை உடைத்து கொள்ளை

කැළණිවැලි දුම්රිය මාර්ගයේ අලුත් වැඩියාවක්

உலகின் அதிகூடிய வயதைக்கொண்ட நபி தஜுமா காலமானார்