வணிகம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019 இல் 5.1 சதவீதமாக அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கையினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019ம் ஆண்டளவில் 5.1 சதவீதமான அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக அமைந்திருக்கும்.

இத்தொகை 2019ம் ஆண்டில் 5.1 ஆக அதிகரிக்கும் இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டங்கள் பெரிதும் உதவும்.

உலக வங்கியின் 2017 ஜூன்மாத பொருளாதாரம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 2016ல் நடுத்தர கால தனியார் போட்டித்தடைகள் குறைவடைவதற்கு உலகவங்கியின் அபிவிருத்தி தொடர்பான கொள்கை திட்டங்கள் வழிசெய்திருப்பதுடன் வெளிநாடுகளில் நேரடி முதலீடுகளை கவரக்கூடியதான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்.

தெற்காசிய நாடுகள் தொடர்பான பொருளாதார விடயங்கள் குறித்த அறிக்கையிலேயே உலக வங்கி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.

Related posts

சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக உடன்படிக்கை

இலங்கை சில்லறை முதலீட்டு நிலப்பரப்பில் ‘Softlogic Invest’ ஆரம்பம்

இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி