வகைப்படுத்தப்படாத

அனர்த்தத்தினால் கடவுச்சீட்டுக்களை இழந்தோர் விண்ணப்பிக்க முடியும்

(UDHAYAM, COLOMBO) – சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவினால் கடவுச்சீட்டுக்களை இழந்தோர் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களின் உறுதிசெய்யப்பட்ட கடிதத்துடன் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழ்கள் தேசிய அடையாள அட்டை திருமணச்சான்றிதழ் மற்றும் குறிப்பிட்ட சான்றிதழ்களை இழந்த நிலையில் உடனடியாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவையை கொண்டுள்ளவர்கள் பிரதேச செயாளர்களின் சிபார்சு கடிதத்துடன் விண்ணப்பிக்க முடியும்.

பிரதேச செயலாளர் அவர் அல்லது அவள் தொடர்பான இந்த விண்ணப்பதாரியின் கடிதத்தில் சமீபத்திய இயற்கை அனர்த்தம் தொடர்பாக குறிப்பிடவேண்டும் என்றும் இதற்கான சுற்றுநிருபத்தை உரிய அதிகாரிகளுக்கு அனுப்புவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கியதேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

Related posts

சீன ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்கா ஜனாதிபதி

போர்த்துகலில் துக்க தினம் பிரகடனம்

St. Peter’s rout Kingswood 53-12