(UDHAYAM, COLOMBO) – உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகள் காரணமாக இன்று கிளிநொச்சி, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய ஆகிய மாவட்டங்களில் மின் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.
இதற்கமைய இன்று காலை 8.00 மணியிலிருந்து மாலை 5.30 வரை கிளிநொச்சி பிரதேசத்தின் வேராவில், கிராஞ்சி, வலைப்பாடு ஆகிய இடங்களிலும், வவுனியாவில் தேக்கவத்தை பிரதேசத்திலும் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, திருத்த வேலைகள் காரணமாக இன்று களுவாஞ்சிகுடி பகுதியில் மின்சார விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கயைய காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேற்றாத்தீவு, மற்றும் களுதாவளை ஆகிய பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருகோணமலை தெற்கு பகுதியில் இன்று 9 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாகவே இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக திருகோணமலை தெற்கு நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது
இதன்படி, அதிகாலை 3.00 மணியில் இருந்து நண்பகல் 12.00 மணி வரையில் நீர்விநியோகம் தடையில் இருக்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.