வகைப்படுத்தப்படாத

விடுதலை என்ற உன்னத இலட்சியத்தை சுமந்து வெளிவருகிறது “நீந்திக் கடந்த நெருப்பாறு”

(UDHAYAM, COLOMBO) – தமிழர் தேசத்தின் மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய “பூநகரியில் இருந்து புதுமாத்தளன் வரை என்ற நீந்திக் கடந்த நெருப்பாறு” எனும் ஆவணப்பதிவின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 10.06.2017 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தி.இராசநாயகம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்  வடமாகாண கல்விப்பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண விவசாய கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ள உள்ளனர்.

“விடுதலை என்ற உன்னத இலட்சியத்தை அடைய நெருப்பாற்றை நீந்திய எமது மக்களின் வீரமும் தியாகமும் ஒளிவிடும் இலக்கியப்படைப்பு “ஆக இந்நூல் வெளிவருகின்றது. இவ்வெளியீட்டு விழாவிற்கு படைப்பாளிகள், தமிழ்த்தேசியஉணர்வாளர்கள், முன்னாள் போராளிகள் பல்துறைசார்ந்த அனைவரையும் அழைத்து நிற்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்

எஸ்.என்.நிபோஜன்

Related posts

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை:மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ரஷ்ய புற்றுநோய் மருந்த தரம் தொடர்பில் பிரச்சினை எழவில்லை – சுகாதார அமைச்சு