வகைப்படுத்தப்படாத

தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விரிவுரையாளர்

(UDHAYAM, COLOMBO) – தனது 8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் அண்மையில் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதான குறித்த சந்தேக நபர், பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இவர் தனது மகளை இவ்வாறு நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மகள் அண்மையில் தனது தாயிற்கு கூறியுள்ளார்.

பின்னர் தாய் இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், சந்தேக நபரான பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.

எனினும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

இன்றும் மழை

ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்த மக்கள்

NTJ Colombo District organizer granted bail