வகைப்படுத்தப்படாத

மண்சரிவு அபாயம் நாவலபிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை தொண்டமான். மஹிந்தாந்த .வேலுகுமார் கல்லூரிக்கு உடனடி விஜயம்

(UDHAYAM, COLOMBO) – மண்சரிவு அபாயத்தினால் நாவலபிட்டி கதிரேசன் மத்திய  கல்லூரி மாணவர்களுக்கு எதிர்வரும் எதிர்வரும் 7 ம் திகதி புதன்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் டி.நாகராஜ் தெரிவித்தார்

கடந்த 30 ம் திகதி கல்லூரியின் மூன்று மாடி கட்டிடப்பகுதியிலுள்ள பாதுகாப்பு மதில் கட்டடம் இடிந்து வீழ்ந்த நிலையில் கீழ் பகுதியில் அமைந்துள்ள வகுப்பரை கட்டடத்தின் தரம் 6.தரம் 7 வகுப்பறைகள் மூன்று சேதமாகியது

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேல் அமைந்துள்ள கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது

மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மத்திய மாகாண கல்கவிப்ல்விபனிப்த்திபாளரின் அனுமதியுடன்  பாடசாலைக்கு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

அத்தோடு பாடசாலையின் பின்புரம் 60  அடி உயரமான பாரிய மண்மேடு காணப்படுவதுடன் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது

குறித்த மலை பிரதேசத்திலே நாவலபிட்டி நகரிற்கு நீர்

வழங்கும் நீர்தாங்கியும் அமைந்துள்ளது அனர்ந்தம் ஏற்படும் பட்சத்தில் பாரிய அபாயத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என நாவலபிட்டி     பி ரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

மண்சரிவிற்கு உள்ளான நாவலபிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான   ஆறுமுகன் தொண்டமான்.பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தாநந்த அலுத்கமகே.வேலுகுமார் ஆகியோ உடனடியாக   நேரில் சென்று பார்வையிட்டனர்

கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்ட தொண்டமான்  அனர்த்தம் தொடர்பாக  மத்திய மாகாண பொறியில் திணைக்கள நிறைவேற்று அதிகாரியிடம் இக் கட்டிட நிர்மாண தொடர்பான திட்டமிடலை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

இதன் போது மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மத்திய மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகள் ,பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் ,பழைய மாணவர்கள் உட்பட பலர்ரும் வருகைத்தந்திருந்தனர்.

Related posts

Dadashev dies after boxing injuries

கம்போடியா கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டின் பல பிரதேசங்களில் மழை