வகைப்படுத்தப்படாத

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டம் – ஊடகத்துறை அமைச்சர் கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – முக்கிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அரசாங்கதிதின் கொள்ளை செயல்படுத்தப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஐனநாயகம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அரசாங்கம் செயல்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடங்களை குறிப்பிட்டார்.

இன மத கட்சி வேறுபாடு இன்றி இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரச மற்றும் தனியார் ஊடகத்துறையினரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பிராந்தியத்தில் செயல் முறையிலான ஊடக செயற்பாடு இருப்பதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

1948 ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி நாம் சுதந்திரம் அடைந்த போது இந்த பிராந்தியத்தில் ஜப்பானே செல்வ செழிப்புடன் விளங்கியது. சுக வளங்களுடன் நாமும் சிலோன் என்ற நன்மதிப்புடன் சர்வசே ரீதியில் நற்பெயரைப் பெற்றிருந்தோம். அக்காலப்பகுதியில் தற்போது உலகில் வளர்ச்சிக்கண்ட நாடாக திகழும் கொரிய மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. கொரியா என்பது சேரிப்பகுதியை குறிக்கும் சொல். இன்று அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட நாட்டில் இன்று எமது இளைஞர்கள் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர் என’றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டை வளமிக்க அபிவிருத்திக்கொண்ட நாடாக மேம்படுத்துவதற்காக சமகால நல்லாட்சி அரசங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தெற்கில் சில சிங்கள கடும்போக்காளர்கள் இதனை சீர் குழைக்கப்பார்க்கின்றனர். பதவியை இழந்தவர்கள் இதன் மூலம் பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர். இதே போன்று வடக்கிலுள்ள சில கடும்போக்காளர்களும் இவ்வாறு செயல் படுகின்றனர்.

தெற்கில் இளைஞர்கள் துப்பாக்கியை ஏந்தியது போன்று வடக்கிலும் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தினார்;கள்.

இவ்வாறான் நிலை நாட்டில் மீண்டும் ஏற்படாதிருப்பதற்காகவே ஐனநாயகம் நலிணக்கம் ஆகியவற்றுடன் அபிவிருத்தி என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். சகல  மக்களுக்கும் சகல உரிமையும் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்கள் மத்தியில் சிலர் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். புத்த பெருமானின் பெயரில் சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர். பதவியை இழந்தவர்களை மீண்டும் பதவியில் அமர்த்த இவர்கள் துணைபோகின்றனர்.

பொருளாத ரீதியல் நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும். இதற்கு நாம் உலகுடன் ஒன்றிணைந்து பணிக்க வேண்டும்.

ஜெனிவாவில் எமக்கு 48 நாடுகள் உதவின. இது முன்னொரு போதும் கிடைத்திராத அமோக ஆதரவு. இலங்கை தொடர்பில் இன்று சர்வதேச ரீதியல் நற்பெயர் உண்டு. இதனால் தான் உலக நாடுகளின் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கின்றனர்.

காலங்கடந்த சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.எமது மாணவர்களின் உயர் கல்விக்கு நாம் உதவ வேண்டும்.

பொது மக்களுக்கு உண்மையை ஊடகங்கள் கூற வேண்டும்.பூகோள ரீதியிலான நன்மைகளைப்பயன்படுத்தி நாட்டை மேம்படுத்த வேண்டும். ஊடகங்களும் இதற்கு உதவ வேண்டும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

Related posts

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்..!

மின்சார கட்டண குறைப்பு நடவடிக்கை

கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி