வகைப்படுத்தப்படாத

கொழும்பை சர்வதேச நிதி நகரமாக மாற்ற நடவடிக்கைகள்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பை சர்வதேச நிதி நகரமாக மாற்ற, சாத்தியபாடான செயல்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி செல்வா தெரிவித்துள்ளார்.

இதுவே தமக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான பொறுப்பு என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் புதிய பிரதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தில் 4 இராஜாங்க அமைச்சர்கள் 4 பிரதி  அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று மாலை சந்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹர்ஷ டி சில்வா இதனை குறிப்பிட்டார்.

இந்த புதிய சீர்திருத்தத்திற்கு அமைய 25 ஆக இருந்த பிரதி அமைச்சுக்களின் எண்ணிக்கை 24 ஆக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, 21ஆக இருந்த இராஜாங்க அமைச்சுக்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் அமைச்சுக்களின் செயலாளர்கள் பதவிகளிலும் எதிர்வரும் தினங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

அதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை சீர்திருத்தத்தில், அமைச்சர்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட பொறுப்புக்கள் தொடர்பில் இந்த வாரத்துக்குள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

பாண் இறத்தால் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைப்பு!

இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரிப்பு

அனர்த்த இழப்பீடு இன்று முதல்