(UDHAYAM, COLOMBO) – தகுதியானவர்களுக்கு தகுதியான பதவி வழங்குவதே தமது கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகாவெலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மஹிந்த அமரவீர தமது கடமைகளை பெறுப்பேற்கும் நிகழ்வு இன்று மகாவெலி அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்றது.
அதன்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
நாடு குறித்து சிந்திக்க வேண்டும்.
அதன் அடிப்படையிலேயே புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல தகுதியானவர்களுக்கு தகுதியான பதவிகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.