வகைப்படுத்தப்படாத

ஹட்டன் டிப்போவின் 10 புதிய பஸ் வண்டிகள் சேவை ஆரம்ப நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவின் புதிய பஸ் வண்டிகளின் சேவையை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார்

ஹட்டன்  டிப்போவினால் லீசிங் முறையில் பெற்றுகொள்பட்ட 10 புதிய பஸ் வண்டிகளை சேவை ஆரம்பிக்கும் நிகழ்வு 31.05.2017 நடைபெற்றது

தலா 55 லட்சம் ருபா பெருமதியான இரட்டைக்கதவு புதிய பஸ் வண்டியானது  ஹட்டன் டிப்போவினால் 1 கோடி எழுபத்தைந்து லட்சம் ரூபா செலுத்தப்பட்டு 30 மாத தவனையிலே லீசிங் முறையில் 10 பஸ் வண்டிகளை தருவிக்கப்பட்டுள்ளது

மேற்படி புதிய பஸ் வண்டிகள் தூர சேவைக்கு ஈடுபடுத்தவுள்ளதாகவும் ஹட்டன் டிப்போவினால் இனிவரும் காலைங்களில் 109 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தனர்

புதிய பஸ் வண்டிகளின் சேவை ஆரம்ப நிகழ்வு ஹட்டன் டிப்போ முகாமையாளர் அனுரதொடாந்தன்ன தலைமையில் ஹட்டன் பிரதான பஸ் நிலையத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பிரதாச உட்பட பலர் கலந்துகொண்டனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

நாட்டில் பல பிரதேசங்களில் மழை

ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற வழக்கில் கலிதா ஜியா மகனுக்கு ஆயுள்

Samoa beat Sri Lanka 65-55