வகைப்படுத்தப்படாத

சர்வ மத தலைவர்கள் ஒரே மேடைக்கு வரவேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மத அடிப்படையிலான முரண்பாடுகளை தடுப்பதற்கு சர்வசமய தலைவர்கள் ஒரே மேடையில் ஏற வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இத்தகைய நெருக்கடிகளை தடுப்பதற்கு சட்டமும், ஒழுங்கும் முறையாக அமுலாக்கப்படும். நெருக்கடிகளுக்கு தூபமிடும் தரப்புக்கள் மத்தியில் விடயங்களை விளக்கிக் கூற பொதுவான வேலைத்திட்டம் அவசியம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

சர்வ மத ஆலோசனை குழுவின் அங்கத்தவர்கள் மத்தியில் ஜனாதிபதி நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் சண்டைகளை தூண்டி, தேசிய ரீதியில் பிரச்சினையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மாவட்ட மட்டத்தில் மத ரீதியான பிரச்சினைகள் பற்றி கவனிக்கக்கூடிய குழு உருவாக்குவது அவசியம். இதற்காக சமயத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் அடங்கிய குழுக்களை அமைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சர்வசமய ஆலோசனைக் குழு மாதம் ஒரு முறை கூடுவது அவசியம். இன, மத அடிப்படையிலான நெருக்கடிகளில் நடுநிலையாக செயற்படுவது சகலரதும் பொறுப்பென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

Related posts

மயிலிட்டியில் 54 ஏக்கர் காணி விடுவிப்பு – [PHOTOS]

Army Commander to testify again before PSC

“நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயம்” – பிரதமர்