விளையாட்டு

ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இம்முறை நடைபெறுவது எட்டாவது சுற்றுத்தொடராகும். எதிர்வரும் 18ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இரு குழுக்களில் எட்டு அணிகள் போட்டியிடுகின்றன. அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏ குழுவில் போட்டியிடுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கை பி பிரிவில் போட்டியிடுகிறது. இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகும்.

சுற்றுத்தொடரை முன்னிட்டு இங்கிலாந்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மென்செஸ்ட்டர் அரீனா நகரில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Related posts

ஐ.சி.சி தலைவர் ஷஷாங்க் மனோகர் பதவியிலிருந்து விலகல்

ஆசிய கிண்ணம் 2022: இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

போட்டியில் இருந்து விலகிய அம்புள்தெனிய