(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அனர்த்தத்திற்குள்ளாகியிருக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2017ம் ஆண்டு ஜூன் மாத சம்பளத்தை தான் நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த பணத்தை தாம் பின்வரும் கணக்கில் வைப்பீடு செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளார்.
கணக்கின்பெயர் : செயலாளர் , இடர்முகாமைத்துவ அமைச்சு, இடர் நிவாரண கணக்கு
வங்கியின் பெயர் மற்றும் கிளை : இலங்கை வங்கி / ரொறிங்டன் கிளை
கணக்கு இலக்கம் : 7040171