விளையாட்டு

இந்தியா வெற்றி

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள செம்பியன் லீக் தொடரில் பங்குகொள்ளும் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி ஒன்று நேற்று இடம்பெற்றது.

அந்த போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையின் படி 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 38.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இந்திய அணி, 26 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இந்தநிலையில் டக்வத் லூயிஸ் முறையின் படி இந்திய அணி 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

தட்டிச் சென்றார் ‘ஜோகோவிச்’

2019-2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா