உள்நாடு

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், க.பொ.த சாதாரண தர (சா/த) பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு மொத்தம் 4,441 ஆங்கில ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு 6,500 ஆங்கில ஆசிரியர்கள் தேவை எனவும் தெரிவித்தார்.

அதன்படி, இந்த ஆண்டு பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. 765 பாடசாலைகள் ஆங்கிலத்தில் பாடங்களை நடத்துகின்றன. மேலும், ஆங்கில ஆசிரியர்களின் எண்ணிக்கையை 6,500 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அனுமதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

Related posts

கொரோனாவிலிருந்து 479 பேர் குணமடைந்தனர்

வில்பத்துவை அழிக்கச்சென்ற பவித்ராவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தடை

பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு – ரஞ்சித் மத்தும பண்டார

editor