உள்நாடுபிராந்தியம்

25 வயதுடைய ஜோர்தான் நாட்டு பெண் கடலில் மூழ்கி பலி

பெந்தோட்டை,பொல்கொட பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று (23) பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​அந்தப் பெண் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அந்த பெண்ணை அருகிலுள்ளவர்கள் மீட்டு பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர் 25 வயதுடைய ஜோர்தான் நாட்டு பெண் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் நாட்டுக்கு அச்சமான சூழல்”