வகைப்படுத்தப்படாத

25 மாவட்டங்களிலும் தற்காலிக விசேட முகாம்கள்

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்படுகின்ற மக்களை தங்க வைப்பதற்கான தற்காலிக விசேட முகாம்கள் 25 மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பில் முழுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட உடன், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பிரதேச மக்களை தங்க வைப்பதற்காக இந்த முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2017ஆம் – 2018ஆம் ஆண்டு கால எல்லைக்குள் நாடளாவிய ரீதியாக 100 விசேட தற்காலிக முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிலிப்பைன்ஸில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம்

புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது

Suspect injured after being shot at by Army dies