வகைப்படுத்தப்படாத

‘மோரா’ புயல் – மலையகத்தில் கடும் மழை

(UDHAYAM, COLOMBO) – வங்காள விரிகுடாவில் நிலவிய குநை;த தாழமுக்கம் ‘மோரா’ புயல் வங்காள நாட்டை நோக்கி நகர்வதால் மழை அதிகரிப்பதுடன் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலநிலையில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கமுடியும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு பிரதேசத்தில் 100 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டை சுற்றிலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேற்கு சப்ரகமுவ தெற்கு மத்தி மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டில் கடும் காற்று மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக மத்திய மலைப்பிரதேசங்களின் மேற்கு பிரதேசங்களிலும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலும் இந்த காற்று வீசக்கூடும் .

வடக்கு , வடமத்திய மாகாணங்களில் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

தாய்லாந்தில் பேக்டரிக்கு சென்ற பேருந்து தீப்பிடித்தது- 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு

இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பலி

கருணாநிதி உடல்நலக் குறைவுக்கு உள்ளானமை காரணமாக 21 பேர் உயிரிழப்பு